குளக்கட்டு விநாயகர் ஆலயம்

குளக்கட்டு விநாயகர் ஆலயம்

செருக்கன் குளக்கட்டு விநாயகர் ஆலயம் Photos Hindu story தமிழ் புராண நூல்கள் இதிகாசம் இந்து சமய கதைகள் இந்து புராணமக்கள் இதிகாசங்கள் திருமுறைகள் தேவார பதிகங்கள் பக்திப் பாடல்கள் தேவாரம் கதைகள் இந்து கதைகள்

test

Breaking

Tuesday, September 7, 2021

உணவில் ஐந்து தோஷங்கள்

September 07, 2021 0
உணவில் ஐந்து தோஷங்கள்

 உணவில் உள்ள ஐந்து வகை தோஷங்கள்||




வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே, யாரால் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.


அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு:


அர்த்த தோஷம்

நிமித்த தோஷம்

ஸ்தான தோஷம்

ஜாதி தோஷம் இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்

சம்ஸ்கார தோஷம்

அர்த்த தோஷம்


அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.


பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். 


உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். 


மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். 


தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். 


பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.


 சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். 


தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார்.


 வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.


 பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.


நிமித்த தோஷம்


உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். 


பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர்.


 திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். 


அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. 


இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார்.


 தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.


ஸ்தான தோஷம்


உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். 


சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.


 துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. 


கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.


 கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். 


இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். 


எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். 


உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.


ஜாதி தோஷம்


மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும்.


 சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.


சாத்வீக குணம் - உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.


ரஜோ குணம் - புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். 


இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். 


ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.


தாமச குணம் - பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும்.

இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.



சம்ஸ்கார தோஷம் :-


தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது.


 அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.


இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். 



அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும்.


 தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தது


திருச்சிற்றம்பலம்

Wednesday, September 16, 2020

பிரதோஷம், பிரதோஷ வகைகள்

September 16, 2020 0
பிரதோஷம்,  பிரதோஷ வகைகள்

பிரதோஷம்

பிரதோஷம், 

அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை
சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம்...
பிரதோஷ மகிமை மகாபாரதப் போருக்கு முன் ஒரு காட்சி ....

தருமன் தன் சகோதரர்கள் பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் அமர்ந்திருக்கிறான். கிருஷ்ணனும் ஏதோ நினைத்தபடியே இங்கும் அங்கும் உலாவிக்கொண்டு இருக்கிறான். “போரில் பாண்டவர்கள் வெற்றி பெற என்ன செய்யலாம்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவன், இப்பொழுது சகாதேவன் பக்கம் திரும்பி, அவனை மட்டும் தனியே அழைக்கிறான். சோதிட சாத்திரத்தைக் கசடறக்கற்றவன் சகாதேவன். இதை பூரணமாக அறிந்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனுடைய அவதார நோக்கத்தையும், அவன் நடத்தப்போகும் நாடகங்களையும் நன்கு அறிந்தவன் சகாதேவன். அழைபிற்கிணங்கி கிருஷ்ணனிடம் வருகிறான். கிருஷ்ணனும் அவனை ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

கிருஷ்ணன்: “சகாதேவா! நியாயமான போட்டியில் வெற்றி காண்பதற்குச் சோதிட ரீதியாக ஒரு வழி சொல்வாயா?

சகாதேவன்: “கண்ணா!! நீ என்ன கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். நடக்கப்போகும் பாரதப்போரில் வெற்றி பெற வழி கேட்கிறாய். ‘நியாயமான போட்டி’ என்று புரட்டுகிறாய். எல்லாம் தெரித்தவன் ‘நீ’. அமாவாசை நாளையே மாற்றியவன் ‘நீ’. ஒன்றும் அறியாதவனைப்போல் கேட்டு, என்னை ஏமாற்றுகிறாயே!

கிருஷ்ணன்: அப்படியில்லை, சகாதேவா! என்ன இருந்தாலும் சோதிடக் கலையைக் கசடறக் கற்று, பாரபட்சமின்றி, வணங்கிக் கேட்பவர்களுக்கு வாரித் தருபவன் நீ. அடியேனும் இப்போது உன்னை வணங்கித்தான் கேட்கிறேன். பதில் கிடைக்குமா, கிடைக்காதா?

சகாதேவன்: (கண்ணை மூடி, தீவிரமாக யோசித்து விட்டு) திருமால் மத்தளம் கொட்டுவான். அந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய். நியாயமான போரில் வெற்றி பெறுவாய்.

கிருஷ்ணன்: என்ன! திருமால் மத்தளம் கொட்டினானா? என்ன உளறுகிறாய்? (குறும்புச் சிரிப்பை உதிர்க்கிறான்.)

சகாதேவன்: கிருஷ்ணா! உத்தம வழிபாட்டிற்குரிய தெய்வம் நீ....... இருந்தாலும், நீயே செய்ய வேண்டிய அதி உத்தம வழிபாடு ஒன்று உண்டு, அந்த வழிபாட்டில் திருமால் தவறாது மத்தளம் கொட்டுவார். அதைத்தான் சொன்னேன்!

கிருஷ்ணன்: சகாதேவா.... ஆர்வத்தைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே! அந்த அதிஉத்தம வழிபாடுயாது?

சகாதேவன்: கிருஷ்ணா.... அனைத்தையும் அறிந்தவன் 'நீ'. இருந்தாலும் மக்களுக்காகக் கேட்கிறாய்! சொல்கிறேன், 'பிரதோஷம்' என்று ஒரு அதி உத்தம வழிபாடு உண்டு. அதில் எம்பெருமானாகிய சந்திரசேகரமூர்த்தியும் அம்பிகையும் நந்தி வாகனத்திலமர்ந்து பவனி வருவர், அதையே 'பிரதக்ஷிணம்' என்றும் சொல்வர். பிரதக்ஷிணத்தில் பலவகை உண்டு, அதில் உத்தமமானது 'சோமசூக்த பிரதக்ஷிணம்' என்பது, அந்த சோமசூக்த பிரதக்ஷினத்தில் ஈசன் வாகனத்தில் ஈசான்ய மூலைக்கு வரும்போது மஹா தூப தீப ஆராதனைகள் நடக்கும். அதை குருவருளால் முறையாக தரிசனம் செய்தால் முறையான போட்டியில் தவறாமல் வெற்றி கொள்ளலாம். மேலும் அந்த உத்தம வழிபாட்டின்போதுதான் திருமால் திருக்கைலாயத்தில் ஈசனுடைய நாட்டியத்திற்கு அற்புதமாக மத்தளம் கொட்டுகிறான்...

பிரதோஷ வழிபாட்டு மகிமைகளில் மூழ்கிய நிலையில் கிருஷ்ணன் தன் குரு உத்தம சாந்திபீனியிடம் வருகிறான்..... உத்தம குருவும் தன் சீடனுடைய உள்ளத்தை அறிந்து, அவனுக்கு சிவலீலைத் தத்துவங்களைப் பக்குவமாக உபதேசிக்கிறார். அதிலிருந்து பிறந்தது பிரதோஷ வழிபாட்டின் மகிமையும், பெருமையும்.... மக்கள் உணர்ந்து உய்யவே !

இவ்வாறு அவதார மூர்த்தியாகிய கண்ணனே அலைந்து, திரிந்து பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்தானென்றால்... மக்களாகிய நாம் இன்றுவரை பிரதோஷ வழி பாட்டின் மகிமையை உணர்ந்தோமா? அல்லது, உணர முயற்சித்தோமா? அல்லது உணர்ந்தறிந்த உத்தமர்களைத்தான் நாடினோமா? – இல்லை. இருப்பினும் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த நோக்கத்துடன் புவியில் உலவி வரும், அகத்திய பீடத்தின் அழகுறச் செய்யும் தன்னிகரில்லா, அங்காள பரமேஸ்வரி அடிமை, ஸ்ரீ-ல-ஸ்ரீ வேங்கடராம சித்தர் அவர்கள் கிருஷ்ணன், சாந்திபீனியிடம் பெற்ற பிரதோஷ ரகசியங்களை, போகர் அகத்தியரிடம் கற்ற அற்புத பிரதோஷ மகிமைகளை மக்களுக்காக, மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையாக,அருமையாக இங்கு அள்ளி கொடுக்கிறார்கள். மக்களாகிய நாமும் பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்து, பின்பற்றிப் பேரின்பம் அடைவோமாக!!  ..



மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.

பிரதோஷத்தில் பத்து வகைகள் உள்ளன. அவையாவன,.


நித்திய பிரதோஷ விரதம்    -    தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய  பிரதோஷமாகும்.
 
திவ்ய பிரதோஷ விரதம்     -    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.
 
தீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்)  - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.
 
சப்தரிஷி பிரதோஷ விரதம்   -   பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.
 
ஏகாட்ச்சர பிரதோஷ விரதம் -  வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.
 
அர்த்தநாரி பிரதோஷ விரதம்  -  வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
 
திரிகரண பிரதோஷ விரதம்  -  வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.
 
பிரம்ம பிரதோஷ விரதம்  -  இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.
 
ஆட்சரப பிரதோஷ விரதம்  -  வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.
 
கந்த பிரதோஷ விரதம்  -  சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.
 
சட்ஜ பிரபா பிரதோஷ விரதம்  -  வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
 
அஷ்டதிக் பிரதோஷ விரதம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு  ஆகியவற்றை தருவார்கள்.
 
நவகிரக பிரதோஷ விரதம்  -  வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.
 
துத்த பிரதோஷ விரதம்  -  வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.



பிரதோஷ நாட்களில் என்ன கிழமை வழிபாடு செய்தால்,  
என்னனென்ன பலன்கள் கிடைக்கும்….

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள், சோம பிரதோஷம் – நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்

செவ்வாய்ப்பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்

வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப்பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்

Tuesday, September 15, 2020

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் - 05

September 15, 2020 0
 காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் - 05

 காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் - 05





முத்துமாரியம்மன் பாடல் : 

நானும் பாதங் கழுவியெல்லோ முத்துமாரியம்மன்

பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தாள்.

மாரிதேவியம்மன்.


நானும் கொண்டு வந்த பூமலரை முத்துமாரியம்மன்

குபுகுபென நான் சொரிந்தேன். மாரிதேவியம்மன்.


எடுத்துவந்த பூமலரை முத்துமாரியம்மன்

ஈஸ்வரர்க்கே நான் சொரிந்தேன். மாரிதேவியம்மன்.


நானும் ஆய்ந்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்

அத்தாரிற்கே நான் சொரிந்தேன். மாரிதேவியம்மன்.


பறித்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்

பக்குவமாய் நான் சொரிந்தேன். மாரிதேவியம்மன்.


முத்துமாரியம்மன் வசனம் : 

சரி புஷ்பங்கள் எல்லாம் சொரிந்து விட்டேன் 

இனி அத்தாரை நமஸ்காரம் செய்யவேண்டும்.


முத்துமாரியம்மன் பாடல் :

நானும் முக்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை முடி வணங்கி தெண்டனிட்டா மாரிதேவியம்மன்.


நாற்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை நமஸ்கரித்துத் தெண்டனிட்டா மாரிதேவியம்மன்.


ஐக்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை அடிவணங்கி தெண்டனிட்டாள் மாரிதேவியம்மன்.


சரணம் சரணம் என்றோ முத்துமாரியம்மன் - அவா

திருவடியை சரணமிட்டாள் மாரிதேவியம்மன்.


பிடிக்கின்றேன் பாதம் என்றோ - முத்துமாரியம்மன்

அத்தாரின் பொற்பாதம் பிடித்து விட்டாள் மாரிதேவியம்மன்.

சிவன் வசனம்:

பெண்ணே எழுந்திருப்பாய்.

சிவன் பாடல்:

என்றும் இல்லா பெண்ணே பூசையடி

நீயும் எனக்கறிய மாரி சொல்லேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

நந்தவனம் அத்தாரே சென்றதனால் - நானும்

நறுமலர்கள் கொய்து வந்து தான் சொரிந்தேன்.

சிவன் பாடல்:

எடி பல நாளும் மாரிநான் பார்த்தறியா

இந்தப் பாதபூசை பெண்ணே ஏதுக்கடி.

முத்துமாரியம்மன் பாடல்:

அத்தாரே கண்டசுர மாலை வாங்குதற்கு

இந்தக் காரிகையாள் பூசை செய்தேன் அத்தார்.

சிவன் வசனம்:

பெண்ணே எதற்காக இவ்வளாவு நமஸ்காரம்?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே தங்கள் கழுத்தில் இருக்கும் கண்டசுர

மாலையை வாங்குவதற்காகவே இவ்வளவு நமஸ்காரம்.

சிவன் வசனம்:

ஓகோ அப்படியா சங்கதி சரி நான் எனது

மாலையை தருவதாக இருந்தால், நீ உனது

திருநெற்றியில் இருக்கும் நெற்றிக் கண்ணை எடுத்து

எனது நெற்றியில் வைப்பாயாய் இருந்தால்,

நான் எனது கண்டசுர மாலையை தருவேன். 

முத்துமாரியம்மன் வசனம்:

ஆண்புலி அஞ்சிப்பாயும், பெண்புலி ஊடுருவிப்பாயும்

எல்லாம் பின்னாடி பார்ப்போம். எனது கண்ணை எடுத்து

தங்கள் திருநெற்றியில் வைத்தேன்.

சிவன் வசனம்:

பெண்ணே இப்போ எப்படி இருக்கிறது?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தார் முக்கண்ணனாக காட்சியளிக்கின்றார்.

சிவன் வசனம்:

நல்லது பெண்ணே நான் சென்று வருகின்றேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே நல்ல காரியம் செய்து விட்டீர்கள் மாலையைத் தரவேண்டும்.

சிவன் வசனம்:

மாலையைப் பெறுவதில் அவ்வளவு குறியாக இருக்கிறாய்.

சரி இதோ மாலையைப் பெற்றுக்கொள் நான் வருகிறேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே மாலையைக் கொடுத்தால் மட்டும் போதுமா?

மாலையின் மகத்துவத்தையும் சற்றுக் கூறுங்கள் பார்ப்போம்.

சிவன் வசனம்:

பெண்ணே மாலையின் மகத்துவத்தை தெரிவிப்பதாக இருந்தால்

பொழுது விடியும், பொற்கோழி கூவும், நிலவு விடியும், நீல வண்டு கத்தும் பெண்ணே. 

முத்துமாரியம்மன் வசனம்:

காரியமில்லை தெரிவியுங்கள் அத்தாரே.

சிவன் பாடல்:

எண்சாண் உடம்பதெல்லாம் பெண்ணே நீ கேளாய்

இரு பிளவாய் கட்டிவைக்கும் மாரி நீ பாராய்.


காய்ச்சல் உடன் தடிமன் பெண்ணே நீ கேளாய்

இதில் காலுளைவு நாரிக்குத்து மாரி நீ பாராய்.


ஈமை இருமலடி பெண்ணே நீ கேளாய் - இதில்

இடுப்புவலி மண்டைக்குத்து மாரி நீ பாராய்.


வரகரிசிச் சாயலைப் போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே வருமடியே தொப்பளங்கள் மாரி நீ பாராய்.


திணை அரிசிச் சாயலைப் போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே சிந்துமடி சின்னமுத்து மாரி நீ பாராய்.


பன்னீர்க் குடமது போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே படருமடி தொப்பளங்கள் மாரி நீ பாராய்.


இப்பேற்பட்ட நோய்கள் எல்லாம் பெண்ணே நீ கேளாய்

இங்கே இருக்குதடி மாலையிலே மாரி நீ பாராய். 


சிவன் வசனம்:

மாரி இதுதான் மாலையின் மகத்துவம். நான் சென்று வருகிறேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே! நல்லது. சரி சவர்த்தரையில் ஒரு முத்தை

விதைத்தால் எப்படியிருக்கும்?

சிவன் வசனம்:

சாவி சப்பட்டையாய்ப் போய்விடும்.

முத்துமாரியம்மன் வசனம்:

நல்ல தரையில் ஒரு முத்தைப் போட்டால்

எப்படியிருக்கும் அத்தாரே?

சிவன் வசனம்:

நல்ல படியாக முளைத்து வரும் பெண்ணே. 

முத்துமாரியம்மன் வசனம்:

வழியில் போறவனுக்கு ஒரு முத்தைப் போட்டால்

எப்படியிருக்கும் அத்தாரே?

சிவன் வசனம்:

போர்த்து முக்காடிட்டு மூலையில் போய் இருப்பான்.

முத்துமாரியம்மன் வசனம்:

வழியில் போகிறவனுக்குப் போடுவதை விட

அத்தாரிற்கே இம்முத்துக்களை போட்டுப்

பார்த்தால் எப்படியிருக்கும்?

சிவன் வசனம்:

அடியே! சண்டாளி! நன்மை செய்தவனுக்கே தீமை

செய்யப்பார்க்கிறாயா? என்னிடம் இருந்த கண்டசுர 

மாலையை வாங்கியதும் அல்லாமல் அதில் உள்ள

நோய்களையும் எனக்கே போடப் பார்க்கிறாயா?

சரி போடு பார்க்கலாம்.

முத்துமாரியம்மன் பாடல்:

நானும் மொட்டாக்கைத் தான் திறந்தோ முத்துமாரியம்மன்

இப்போ மூன்று முத்தைத் தானெறிந்தாள் மாரிதேவியம்மன்.


நானும் ஆக்கைத் திறந்தல்லவோ முத்துமாரியம்மன்

இப்போ ஐந்து முத்தைத் தானெறிந்தா மாய சிவனார்க்கு.


பயணம் பயணம் என்றோ முத்துமாரியம்மன்

தாயார் பயணபுரம் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.


தொடரும்...............

Sunday, September 6, 2020

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 04

September 06, 2020 0
 காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர்   – 04
 காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர் 
– 04





சிவன் வசனம்: 

நல்லது அந்த ஆங்காரமாரி என்னை நினைத்து அகோர தவம் செய்கின்றாள். அவளது தவத்தை எப்படியாவது கலைக்க வேண்டும். அப்படிக் கலைப்பதாய் இருந்தால் எனது வெற்றி எனப்படும் வேலாயுதத்தையும், சக்தி எனப்படும் சூலாயுதத்தையும் விட்டெறிய வேண்டும் இதோ......


சிவன் பாடல்  : -
 நானும் வேலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ விசிக்கி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும்.

நானும் சூலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் -  இப்போ சுழட்டி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும்.


மண்ணதிர விண்ணதிர வேலாயுதம் தானும் - அது மலையதிரப் போய் வருமாம் சூலாயுதம் தானும்.

 
சிவன் வசனம்: 
என்ன ஆச்சரியம்! எனது வெற்றி எனப்படும் வேலாயுதமும்,
சக்தி எனப்படும் சூலாயுதமும் இன்னமும் திரும்பி வரக்காணோம்.

இது என்னவோ மாரியின் சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். நான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும். அப்படிச் செல்வதாய் இருந்தால் நான் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. ஓர் வயோதிப வடிவம் எடுத்துத்தான் செல்ல வேண்டும். இதோ அப்படியே செல்கிறேன்.

சிவன் பாடல்: 

நானும் என்ன வடிவெடுத்தேன் ஆதிசிவன் - நானும் எண்ணமற்ற சிந்தையிலே. நானும் தொண்ணூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும் துவண்ட கிழவனைப் போல். நானும் நானூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும் நரைத்த கிழவனைப் போல். தள்ளாடித் தள்ளாடித்தான் ஆதிசிவன் - இப்போ தடிபிடித்தோ தான் நடந்தார். மாரி தவத்தடிக்கோ ஆதிசிவன் - நானும் மளமளென்று வந்து நின்றேன்.


முத்துமாரி வசனம்:

எனது தவத்தடியில் யாராலும் வரமுடியாது. ஞானத்தால் பார்க்கின்றபோது, வயோதிப வடிவில் அத்தார் தான் வந்திருக்கிறார் போல் தெரிகிறது. தவத்தை விட்டிறங்கி அத்தாரை வரவேற்று, அவருக்குப் பாதபூசை செய்து நமஸ்கரித்து, வேண்டிய வரங்களைப் பெறவேண்டும். அத்தாரே வாருங்கள் இவ் ஆசனத்தில் அமருங்கள்.

சிவன் வசனம்:

அப்படியே ஆகட்டும் மாரி.

முத்துமாரி வசனம்:
அத்தாரிற்கு பூசை செய்வதற்கு வேண்டிய புஷ்பங்களை

எடுப்பதற்கு நந்தவனம் செல்லவேண்டும் இதோ செல்கிறேன்.

முத்துமாரி பாடல்:
பூங்காவைத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார்

போதரவாய் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.

முத்துமாரி வசனம்:

பூங்காவிற்கு வந்துவிட்டேன். இனி புஷ்பங்கள் எடுக்கவேண்டும்.

முத்துமாரி பாடல்:

தோட்டம் திறந்தெல்லவோ முத்துமாரியம்மன் தொன்னை தைத்துப் பூவெடுத்தாள். கையாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன் காம்பழுகிப் போகுமென்று மதியாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன் மலர்வாடிப் போகுமென்று வெள்ளியினால் ஒரு கொக்கை கட்டி முத்துமாரியம்மன் விதம் விதமாய்  பூவெடுத்தாள். தங்கத்தினால் நல்ல கொக்கை கட்டி முத்துமாரியம்மன் தகுந்த மலர் தானெடுத்தாள். அத்தலரி நல்ல கொத்தலரி முத்துமாரியம்மன் அடுக்கலரிப் பூவெடுத்தாள். சீதூளாய் செவ்வரத்தி முத்துமாரியம்மன் செண்பகப்பூ தானெடுத்தாள்.

முத்துமாரி வசனம்:

புஷ்பங்கள் எடுத்துவிட்டேன். இனித் தீர்த்தம்  எடுக்க வேண்டும்.

முத்துமாரி பாடல்:
ஓடுகிற கங்கையிலே முத்துமாரியம்மன் ஒரு செம்பு நீரெடுத்தாள்.

பாய்ந்து வந்த கெங்கையிலே முத்துமாரியம்மன் பக்குவமாய் நீர் எடுத்தாள்.

முத்துமாரி வசனம்:

புஷ்பமும், தீர்த்தமும் எடுத்துவிட்டேன் - இனி அத்தாரிடம் செல்ல வேண்டும்.

முத்துமாரி பாடல்:
நானும் அத்தாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - இப்போ அன்புடனே போகலுற்றாள் மாரிதேவி அம்மன்.

சிவனாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார் சீக்கிரமாய் போறாவாம் மாரிதேவி அம்மன்.

முத்துமாரி வசனம்:

சரி இனி அத்தாருக்குப் பன்னீரால் கால் கழுவி, பட்டினால் ஈரம் துவட்டி, கொண்டுவந்த பூக்களைச் சொரிந்து வேண்டிய வரங்களைப் பெறவேண்டும்.


தொடரும்……..

Monday, August 24, 2020

சுந்தரர் தேவாரம் 1 . 002.திருப்புகலூர்

August 24, 2020 0
சுந்தரர் தேவாரம்       1  .  002.திருப்புகலூர்

 

1.002.திருப்புகலூர்


பண் - நட்டபாடை

சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.              தேவியார்- கருந்தார்க்குழலியம்மை.


காவிரி தென்கரைத் தலம், சோழநாட்டிலுள்ளது.


திருச்சிற்றம்பலம்



12       குறிகலந்தவிசை பாடலினான்நசை

                      யாலிவ்வுலகெல்லாம்

             நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு

                       தேறிப்பலிபேணி

             முறிகலந்ததொரு தோலரைமேலுடை

                        யானிடமொய்ம்மலரின்

            பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய

                         லாரும்புகலூரே.

1.002.1

சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன். இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.


13      காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு

                     மார்பனனொருபாகம்

            மாதிலங்குதிரு மேனியினான்கரு

                     மானின்னுரியாடை

           மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ

                    மேவும்மிடஞ்சோலைப்

          போதிலங்குநசை யால்வரிவண்டிசை

                     பாடும்புகலூரே.

1.002.2

காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.


14              பண்ணிலாவும்மறை பாடலினான்இறை

                                சேரும்வளையங்கைப்

                    பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல்

                               என்றுந்தொழுதேத்த

                    உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா

                                வொருவன்னிடமென்பர்

                    மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின்

                                மல்கும்புகலூரே.

1.002.3

இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.


15               நீரின்மல்குசடை யன்விடையன்அடை

                                       யார்தம்மரண்மூன்றுஞ்

                      சீரின்மல்குமலை யேசிலையாகமு

                                     னிந்தானுலகுய்யக்

                      காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட

                                    கடவுள்ளிடமென்பர்

                      ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர்

                                     வெய்தும்புகலூரே.

1.002.4

கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.


16                   செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்

                                      சேரும்மடியார்மேல்

                          பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்

                                     தென்றும்பணிவாரை

                          மெய்யநின்றபெரு மானுறையும்மிட

                                      மென்பரருள்பேணிப்

                          பொய்யிலாதமனத் தார்பிரியாது

                                      பொருந்தும்புகலூரே.

1.002.5

சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.



17 கழலினோசைசிலம் பின்னொலியோசை

                           கலிக்கப்பயில்கானில்

       குழலினோசைகுறட் பாரிடம்போற்றக்

                          குனித்தாரிடமென்பர்

        விழவினோசையடி யார்மிடைவுற்று

                       விரும்பிப்பொலிந்தெங்கும்

        முழவினோசைமுந் நீரயர்வெய்த

                        முழங்கும்புகலூரே.

1.002.6


இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.



18 வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்

                     விளங்கும்மதிசூடி

          உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த

                     வுகக்கும்அருள்தந்தெம்

          கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த

                    கடவுள்ளிடமென்பர்

        புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம்

                     மல்கும்புகலூரே.

1.002.7


கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.



19 தென்னிலங்கையரை யன்வரைபற்றி

                       யெடுத்தான்முடிதிண்டோள்

       தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை

                     கேட்டன்றருள்செய்த

      மின்னிலங்குசடை யான்மடமாதொடு

                    மேவும்மிடமென்பர்

     பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி

                     தோயும்புகலூரே.

1.002.8


அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.



20 நாகம்வைத்தமுடி யானடிகைதொழு

                      தேத்தும்மடியார்கள்

       ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு

                       மாலுந்தொழுதேத்த

       ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய

                     எம்மானிடம்போலும்

       போகம்வைத்தபொழி லின்னிழலான்மது

                       வாரும்புகலூரே.

1.002.9


பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.


21    


                        செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

                                      செப்பிற்பொருளல்லாக்

                        கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் 

                                       கடவுள்ளிடம்போலும்

                        கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு 

                                      தூவித்துதிசெய்து

                       மெய்தவத்தின்முயல் வாருயர்வானக

                                       மெய்தும்புகலூரே.


எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார்களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

 


22 புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்

                                    மேவும்புகலூரைக்

               கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் 

                                   பந்தன்றமிழ்மாலை

               பற்றியென்றும்இசை பாடியமாந்தர் 

                                   பரமன்னடிசேர்ந்து

              குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக

                                 ழோங்கிப்பொலிவாரே.


புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள்சேர் புகழைக்கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

Friday, August 21, 2020

முதலாம் , இரண்டாம் , மூன்றாந் திருமுறைகள்

August 21, 2020 0
முதலாம் , இரண்டாம் , மூன்றாந் திருமுறைகள்


முதலாம் , இரண்டாம் , மூன்றாந் திருமுறைகள்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்தது  


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் சுமார் 16000 என நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நமக்கு 383 பதிகம் (3830 பாடல்கள்) கிடைத்துள்ளன.


முதல் திருமுறையில் 136 பதிகம் (1469 பாடல்கள்) இடம் பெற்றுள்ளன. 

இரண்டாம் திருமுறையில் 122 பதிகம் (1331 பாடல்கள்) இடம்பெற்றுள்ளன.

மூன்றாம் திருமுறையில் 125 பதிகம் (1347 பாடல்கள்) இடம்பெற்றுள்ளன. மேலும் சில பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

முதலாந் திருமுறை திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்தது

August 21, 2020 0
முதலாந் திருமுறை திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்தது

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த 

தேவாரப் பதிகங்கள்

முதலாந் திருமுறை 



முதல் திருமுறையில் 136 பதிகம் (1469 பாடல்கள்) இடம் பெற்றுள்ளன.


 1.001    திருப்பிரமபுரம்    (1-11)

1.002    திருப்புகலூர்    (12-22)

1.003     திருவலிதாயம்    (23-33)

1.004    திருப்புகலியும் - திருவீழிமிழலையும்    (34-44)

1.005    திருக்காட்டுப்பள்ளி    (45-54)

1.006    திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்    (55-64)

1.007    திருநள்ளாறும் - திருஆலவாயும்    (65-75)

1.008    திருஆவூர்ப்பசுபதீச்சரம்    (76-86)

1.009    திருவேணுபுரம்    (87-96)

1.010    திருஅண்ணாமலை    (97-107)

1.011    திருவீழிமிழலை    (108-118)

1.012    திருமுதுகுன்றம்    (119-129)

1.013    திருவியலூர்    (130-140)

1.014    திருக்கொடுங்குன்றம்    (141-151)

1.015    திருநெய்த்தானம்    (152-162)

1.016    திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை    (163-173)

1.017    திருஇடும்பாவனம்    (174-184)

1.018    திருநின்றியூர்    (185-194)

1.019    திருக்கழுமலம் - திருவிராகம்    (195-205)

1.020    திருவீழிமிழலை - திருவிராகம்    (206-216)

1.021    திருச்சிவபுரம் - திருவிராகம்    (217-227)

1.022    திருமறைக்காடு - திருவிராகம்    (228-238)

1.023    திருக்கோலக்கா    (239-249)

1.024    சீகாழி    (250-260)

1.025    திருச்செம்பொன்பள்ளி    (261-271)

1.026    திருப்புத்தூர்    (272-282)

1.027    திருப்புன்கூர்    (283-293)

1.028    திருச்சோற்றுத்துறை    (294-304)

1.029    திருநறையூர்ச்சித்தீச்சரம்    (305-315)

1.030    திருப்புகலி    (316-326)

1.031    திருக்குரங்கணின்முட்டம்    (327-337)

1.032    திருவிடைமருதூர்    (338-348)

1.033    திருஅன்பிலாலந்துறை    (349-359)

1.034    சீகாழி    (360-370)

1.035    திருவீழிமிழலை    (371-381)

1.036    திருஐயாறு    (382-392)

1.037    திருப்பனையூர்    (393-403)

1.038    திருமயிலாடுதுறை    (404-414)

1.039    திருவேட்களம்    (415-425)

1.040    திருவாழ்கொளிபுத்தூர்    (426-436)

1.041    திருப்பாம்புரம்    (437-447)

1.042    திருப்பேணுபெருந்துறை    (448-458)

1.043    திருக்கற்குடி    (459-469)

1.044    திருப்பாச்சிலாச்சிராமம்    (470-480)

1.045    திருப்பழையனூர் - திருஆலங்காடு    (481-492)

1.046    திருஅதிகைவீரட்டானம்    (493-503)

1.047    திருச்சிரபுரம்    (504-514)

1.048    திருச்சேய்ஞலூர்    (515-525)

1.049    திருநள்ளாறு    (526-536)

1.050    திருவலிவலம்    (537-547)

1.051    திருச்சோபுரம்    (548-558)

1.052    திருநெடுங்களம்    (559-569)

1.053    திருமுதுகுன்றம்    (570-579)

1.054    திருஓத்தூர்    (580-590)

1.055    திருமாற்பேறு    (591-600)

1.056    திருப்பாற்றுறை    (601-611)

1.057    திருவேற்காடு    (612-622)

1.058    திருக்கரவீரம்    (623-633)

1.059    திருத்தூங்கானைமாடம்    (634-644)

1.060    திருத்தோணிபுரம்    (645-655)

1.061    திருச்செங்காட்டங்குடி    (656-666)

1.062    திருக்கோளிலி    (667-677)

1.063    திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து    (678-689)

1.064    திருப்பூவணம்    (690-700)

1.065    காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்    (701-711)

1.066    திருச்சண்பைநகர்    (702-721)

1.067    திருப்பழனம்     (722-732)

1.068    திருக்கயிலாயம்     (733-742)

1.069    திரு அண்ணாமலை     (743-753)

1.070    திரு ஈங்கோய்மலை     (754-764)

1.071    திருநறையூர்ச்சித்தீச்சரம்     (765-775)

1.072    திருக்குடந்தைக்காரோணம்     (776-786)

1.073    திருக்கானூர்     (787-797)

1.074    திருப்புறவம்     (798-808)

1.075    திருவெங்குரு     (809-819)

1.076    திரு இலம்பையங்கோட்டூர்     (820-830)

1.077    திருஅச்சிறுபாக்கம்     (831-841)

1.078    திருஇடைச்சுரம்     (842-852)

1.079    திருக்கழுமலம்     (853-863)

1.080    கோயில்     (864-874)

1.081    சீர்காழி     (875-881)

1.082    திருவீழிமிழலை     (882-892)

1.083    திரு அம்பர்மாகாளம்     (893-903)

1.084    திருக்கடனாகைக்காரோணம்     (904-914)

1.085    திருநல்லம்     (915-925)

1.086    திருநல்லூர்     (926-936)

1.087    திருவடுகூர்     (937-947)

1.088    திரு ஆப்பனூர்     (948-958)

1.089    திரு எருக்கத்தம்புலியூர்     (959-968)

1.090    திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்     (969-980)

1.091    திருஆரூர் - திருவிருக்குக்குறள்     (981-991)

1.092    திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்     (992-1002)

1.093    திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்     (1003-1013)

1.094    திருஆலவாய் - திருவிருக்குக்குறள்     (1014-1024)

1.095    திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்     (1025-1035)

1.096    திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்     (1036-1046)

1.097    திருப்புறவம்     (1047-1057)

1.098    திருச்சிராப்பள்ளி     (1058-1068)

1.099    திருக்குற்றாலம்     (1069-1079)

1.100    திருப்பரங்குன்றம்     (1080-1090)

1.101    திருக்கண்ணார்கோயில்     (1091-1101)

1.102    சீகாழி     (1102-1111)

1.103    திருக்கழுக்குன்றம்     (1112-1121)

1.104    திருப்புகலி     (1122-1132)

1.105    திருஆரூர்     (1133-1142)

1.106    திருஊறல்     (1143-1151)

1.107    திருக்கொடிமாடச்செங்குன்றூர்     (1152-1162)

1.108    திருப்பாதாளீச்சரம்     (1163-1173)

1.109    திருச்சிரபுரம்     (1174-1184)

1.110    திருவிடைமருதூர்     (1185-1195)

1.111    திருக்கடைமுடி     (1196-1206)

1.112    திருச்சிவபுரம்     (1207-1217)

1.113    திருவல்லம்     (1218-1227)

1.114    திருமாற்பேறு     (1228-1237)

1.115    திரு இராமனதீச்சரம்     (1238-1248)

1.116    திரு நீலகண்டம்     (1249-1258)

1.117    திருப்பிரமபுரம் - மொழிமாற்று     (1259-1270)

1.118    திருப்பருப்பதம்     (1271-1281)

1.119    திருக்கள்ளில்         (1282-1292)

1.120    திருவையாறு - திருவிராகம்         (1293-1303)

1.121    திருவிடைமருதூர் - திருவிராகம்         (1304-1314)

1.122    திருவிடைமருதூர் - திருவிராகம்         (1315-1325)

1.123    திருவலிவலம் - திருவிராகம்             (1326-1336)

1.124    திருவீழிமிழலை - திருவிராகம்             (1337-1347)

1.125    திருச்சிவபுரம் - திருவிராகம்                 (1348-1358)

1.126    திருக்கழுமலம் - திருத்தாளச்சதி     (1359-1369)

1.127    சீகாழி - திருஏகபாதம்     (1370-1381)

1.128    திருவெழுகூற்றிருக்கை     (1382)

1.129    திருக்கழுமலம்         (1383-1393)

1.130    திருவையாறு             (1394-1404)

1.131    திருமுதுகுன்றம்         (1405-1415)

1.132    திருவீழிமிழலை             (1416-1426)

1.133    திருவேகம்பம்                 (1427-1436)

1.134    திருப்பறியலூர் - திருவீரட்டம்     (1437-1447)

1.135    திருப்பராய்த்துறை     (1448-1458)

1.136    திருத்தருமபுரம்             (1459-1469)

Tuesday, August 11, 2020

எட்டாம் திருமுறை - திருக்கோவையார்- பதின்நான்காம் அதிகாரம்

August 11, 2020 0
எட்டாம் திருமுறை - திருக்கோவையார்- பதின்நான்காம் அதிகாரம்

 திருக்கோவையார்

களவியல் 

 பதின்நான்காம் அதிகாரம்

14. இரவுக் குறி

திருச்சிற்றம்பலம்


பேரின்பக் கிளவி

இரவுக் குறித்துறை முப்பத்திமூன்றும்

அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை

தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்

இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல்.


1. இரவுக் குறி வேண்டல்

மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்

இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப்

பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்

விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148


கொளு

நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து

வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது.


2. வழியருமை கூறி மறுத்தல்

விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு)

அசும்பினில் துன்னி அளைநுழைந் தால் ஒக்கும் ஐயமெய்யே

இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்(கு) அரி(து)எழில் அம்பலத்துப்

பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்(து)எம் வாழ்பதியே .. 149


கொளு

இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப்

பருவரல் பாங்கி அருமை உரைத்தது.


3. நின்று நெஞ்சுடைதல்

மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த

கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி

மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே

ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. .. 150


கொளு

பாங்கி விலங்கப் பருவரை நாடன்

நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.


4. இரவுக்குறி நேர்தல்

கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த்

தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால்

ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து

மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. .. 151


கொளு

தடவரை நாடன் தளர்வு தீர

மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது.


5. உட்கோள் வினாதல்

வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்

நிரையன்(று) அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர்

விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போ(து)

உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. .. 152


கொளு

நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி

யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.


6. உட்கொண்டு வினாதல்

செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும்

மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்(து)

எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து) அணிந்(து)என்ன நன்னிழல்வாய்

அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. .. 153


கொளு

தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து)

என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது.


7. குறியிடங்கூறல்

பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர்

புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து

கனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்

சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று) ஆடும் செழும்பொழிலே. .. 154


கொளு

இரவுக் குறியிவண் என்று பாங்கி

அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது.


8. இரவுக் குறி ஏற்பித்தல்

மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால்

செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ(டு)

அலவன் பயில்வது கண்(டு)அஞர் கூர்ந்(து)அயில் வேல்உரவோன்

செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து) ஆங்கொல்மன் சேர்துயிலே. .. 155


கொளு

அரவக் கழலவன் ஆற்றானென

இரவுக் குறி ஏற்பித்தது.


9. இரவரவு உரைத்தல்

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே

கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி

நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம்

வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. .. 156


கொளு

குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது.


10. ஏதங்கூறி மறுத்தல்

செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்

கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்

முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்

வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. .. 157


கொளு

இழுக்கம் பெரி(து)இர வரின்என

அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.


11. குறை நேர்தல்

ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று

தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி

வீங்கும் கனைபுனல் வீழ்ந்(து)அன்(று) அழங்கப் பிடித்தெடுத்து

வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. .. 158


கொளு

அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு

கொலைவேற் கண்ணி குறைந யந்தது.


12. குறை நேர்ந்தமை கூறல்

ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக்

கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா

யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன்

தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. .. 159


கொளு

குறைந யந்தனள் நெறிகு ழலியென

எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது.


13. வரவுணர்ந்து உரைத்தல்

முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்

பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்

துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல்

மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. .. 160


கொளு

வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி

செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.


14. தாய் துயில் அறிதல்

கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்

சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்

கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத்

தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. .. 161


கொளு

ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில்

தாய துதுயில் தான் அறிந்தது.


15. துயிலெடுத்துச் சேறல்

விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த

மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின்

வண்ணக் குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின்

கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. .. 162


கொளு

தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள்

மெல்லியற்குச் சொல்லியது.


14. இடத்துய்த்து நீங்கல்

நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எ·கம்

தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த

இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்

சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. .. 163


கொளு

மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்

நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.


17. தளர்வகன்று உரைத்தல்

காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த

தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே

பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே

நாமரை யாமத்(து)என் னோவந்து வைகி நயந்ததுவே. .. 164


கொளு

வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத்

நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது.


18. மருங்கணைதல்

அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத்

தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்

இகலும் அவரில் தளரும்இத் தேம்பல்இடைஞெமியப்

புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. .. 165


கொளு

அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப்

பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.


19. முகங்கொண்டு மகிழ்தல்

அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட

செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த

கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்(டு)

எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர் வானத்(து) இளமதியே. .. 166


கொளு

முகையவிழ் குழலி முகமதி கண்டு

திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.


20. பள்ளியிடத்து உய்த்தல்

கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ

அரும்பெறல் தோழிய(டு) ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்

இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்

துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. .. 167


கொளு

பிரிவது கருதிய பெருவரை நாடன்

ஒள்ளிழைப் பாங்கியடு பள்ளிகொள் கென்றது.


21. வரவு விலக்கல்

நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன

விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து) இவளின் மெய்யேஎளிதே

வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற

கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. .. 168


கொளு

தெய்வம் அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி

மைவரை நாடனை வரவுவிலக் கியது.


22. ஆற்றாது உரைத்தல்

பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச்

செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை

மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால்

இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து) என்றும்என் இன்னுயிரே. .. 169


கொளு

வரைவு கடாய வாணுதல்தோழிக்(கு)

அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது.


23. இரக்கங்கூறி வரைவு கடாதல்

பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை

மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்

செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்

மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. .. 170


கொளு

அதிர்க ழலவன் அகன்றவழி

எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது.


24. நிலவு வெளிப்பட வருந்தல்

நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்

நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள்

நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்

நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. .. 171


கொளு

தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப்

பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.


25. அல்லகுறி அறிவித்தல்

மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்

என்அங்(கு) அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப்

பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்

அன்னம் புலரும் அளவும் துயிலா(து) அழுங்கினவே. .. 172


கொளு

வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு

அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது.


26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்

சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)

ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள

ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ

பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. .. 173


கொளு

எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம்

அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது.


27. காமம் மிக்க கழிபடர் கிளவி

மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்

போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள்

ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்(கு) இவளோ

தீதுற்ற(து) என்னுக்(கு)என் னீர்இது வோநன்மை செப்புமினே. .. 174


கொளு

தாமம் மிக்க தாழ்குழல் ஏழை

காமம் மிக்க கழிபடர் கிளவி.


28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி

இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்

பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்

துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க

கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. .. 175


கொளு

மெய்யறு காவலில் கையறு கிளவி.


29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி

தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை

நீருறு கான்யா(று) அளவில் நீந்திவந் தால்நினது

போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும்

சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. .. 176


கொளு

நாறு வார்குழல் நவ்வி நோக்கி

ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.


30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்

கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்

கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்

மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177


கொளு

மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்

தன்னுட் கையாறு எய்திடு கிளவி.


31. நிலைகண்டு உரைத்தல்

பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற

புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்

மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவந் தித்திலன்றி

மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. .. 178


கொளு

நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென

வரைவு தோன்ற வுரை செய்தது.


32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்

பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்

ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத்

தீங்கணைந் தோர்அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே

ஆங்கணைந் தார்நின்னை யும்உள ரோசென்(று) அகன்றவரே. .. 179


கொளு

எறிவேற் கண்ணி இரவரு துயரம்

செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.


33. அலர் அறிவுறுத்தல்

அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்

அலரார் கழல்வழி பாடுசெய் தாற்(கு)அள வில்ஒளிகள்

அலரா யிருக்கும் படைகொடுத் தோன்தில்லை யான்அருள்போன்(று)

அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம் மிக்(கு)ஐய மெய்யருளே. .. 180


கொளு

அலைவேல் அண்ணல் மனம கிழருள்

பலரால் அறியப் பட்ட(து) என்றது.


திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருக்கோவையார்-பதின்மூன்றாம் அதிகாரம்

August 11, 2020 0
எட்டாம் திருமுறை - திருக்கோவையார்-பதின்மூன்றாம் அதிகாரம்

 திருக்கோவையார்

களவியல் 
பதின்மூன்றாம் அதிகாரம்



13. பகற்குறி


திருச்சிற்றம்பலம்



  பேரின்பக் கிளவி

பகற்குறித் துறைமுப் பதினோ டிரண்

டியற்கைபோல் சிவத்தோ டியலுறுக் கூட்டிப்

பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.


1. குறியிடங்கூறல்

வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்

தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல்

தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்

கானுழை வாழ்வுபெற்றாங்கெழில் காட்டுமொர்கார்ப் பொழிலே. 116


கொளு

வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள்

ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது.  


12. ஆடிடம் படர்தல்

புயல்வள ரூசல்முன்ஆடிப் பொன்னேபின்னைப் போய்ப்பொலியும்

அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவிற்

கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளுந்

தயல்வளர் மேனிய னம்பலத் தான்வரைத் தண்புனத்தே. 117


கொளு

வண்தழை யெதிர்த்த வொண்டொடிப் பாங்கி

நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.  


 3. குறியிடத்துக் கொண்டு சேறல்

தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்

சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார்

வினைவளம் நீறெழ நீறணியம்பல வன்றன்வெற்பிற்

புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே. 118


கொளு

அணிவளராடி டத்தாயவெள்ள 

மணிவளர்கொங்கையை மருங்ககன்றது.  3 

 

4. இடத்துய்த்து நீங்கல்

நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப்

பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்

வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங்

குரல்வே யளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. 119


கொளு

மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து

நீங்கலுற்ற பாங்கி பகர்ந்தது.  4 


5. உவந்துரைத்தல்

படமா சுணப்பள்ளி யிக்குவடாக்கியப் பங்கயக்கண்

நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே

இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை

வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே. 120


கொளு

களிமயிற்சாயலை யொருசிறைக்கண்ட

ஒளிமலர்த்தாரோ னுவந்துரைத்தது.  5 


6. மருங்கணைதல்

தொத்தீன்மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோனரு ளன்னமுன்னி

முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏரளப்பான்

ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்

பித்தீர் பணைமுலைகா ளென்னுக் கின்னும் பெருக்கின்றதே. 121


கொளு

வாணுதல் அரிவை நாணுதல் கண்ட

கோதை வேலவன் ஆதர வுரைத்தது.  6 


7. பாங்கியறிவுரைத்தல்

அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்

ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்

களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்

தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே. 122


கொளு

நெறிகுழற் பாங்கி, அறிவறி வித்தது.  7 

 

8. உண்மகிழ்ந்துரைத்தல்

செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே

கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளுங் கள்ளகத்த

கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்

கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே. 123


கொளு

தண்மலர்க் கோதையை

உண்மகிழ்ந் துரைத்தது.  8 


9. ஆயத்துய்த்தல்

கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்

எழுந்தார் மதிக்கம லமெழில் தந்தென இப்பிறப்பில்

அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய்

செழுந்தா தவிழ் பொழி லாயத்துச் சேர்க திருத்தகவே. 124


கொளு

களைகடலன்ன கார்மயிற்கணத்துப்

புனைமடமானைப் புகவிட்டது.  9 


10. தோழிவந்து கூடல்

பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த

மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த

மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்

இன்னனயான் கொணர்ந்தேன் மணந்தாழ்குழற் கேய்வனவே. 125


கொளு

நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்

பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.  10 

  

11. ஆடிடம் புகுதல்

அறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேன்அணியார்

துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல் லப்புகுக

சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்

உறுகால் பிறர்க்கரி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே. 126


கொளு

தனிவிளை யாடிய தாழ்குழற் றோழி 

பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.  11 

 

12. தனிகண்டுரைத்தல்

தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங்

கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர்

முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி

வழங்கும் பிரானெரி யாடி தென்தில்லை மணிநகர்க்கே. 127


கொளு

வேயொத்த தோளியை ஆயத் துய்த்துக்

குனிசிலை யண்ணலைத் தனிகண்டுரைத்தது.  12 

 

13. பருவங்கூறி வரவு விலக்கல்

தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத்

தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா

வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. 128


கொளு

மாந்தளிர்மேனியை வரைந்தெய்தா

தேந்தலிவ் வாறியங்க லென்றது.  13 

 

14. வரைவுடம்படாது மிகுத்துக் கூறல்

மாடஞ்செய பொன்னக ரும்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப்

பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக்

கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்

கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. 129


கொளு

வரைவு கடாய வாணுதற் றோழிக்கு 

விரைமலர்த்தாரோன் மிகுத்துரைத்தது.  14 

 

15. உண்மைகூறி வரைவுகடாதல்

வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்

சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே

ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்

தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே. 130


கொளு

கல்வரை நாடன் இல்லதுரைப்ப

ஆங்கவளுண்மை பாங்கிபகர்ந்தது.  15 


16. வருத்தங்கூறி வரைவுகடாதல்

மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்

றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெலாம்

பன்னும் புகழ்ப்பர மன் பரஞ் சோதிசிற் றம்பலத்தான்

பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே. 131


கொளு

கனங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி

நிரைவளைத் தோளி வரைவு கடாயது.  16 


17. தாயச்சங்கூறி வரைவுகடாதல்

பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகம்

தனித்துண் டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா

கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்

றினிக் கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சு மெம்மனையே. 132


கொளு

மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா

வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.  17 


18. இற்செறி வறிவித்து வரைவுகடாதல்

ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும்

வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப்

போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில்

தீவிளை யாடநின் றேவிளை யாடிதிருமலைக்கே. 133


கொளு

விற்செறி நுதலியை, இற்செறி வுரைத்தது.  18 


19. தமர் நினை வுரைத்து வரைவுகடாதல்

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர்

கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண்

டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தம ரிற்செறிப்பார்

மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. 134


கொளு

விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்

றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.  19 


20. எதிர்கோள்கூறி வரைவுகடாதல்

வழியும் அதுவன்னை யென்னின் மகிழ்வும்வந் தெந்தையும்நின்

மொழியின் வழிநிற்குஞ் சுற்றம்முன் னேவய மம்பலத்துக்

குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக்

கெழியும்ம வேபணைத் தோள்பல வென்னோ கிளக்கின்றதே. 135


கொளு

ஏந்திழைத் தோழி ஏந்தலைமுன்னிக்

கடியாமாறு நொடி கென்றது.  20 

 

21. ஏறுகோள் கூறிவரைவு கடாதல்

படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண்

இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர்

விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்

உடையார் கடவி வருவது போலு முருவினதே. 136


கொளு

என்னையர்துணிவின்ன தென்றது.  21 

 

22. அயலுரையுரைத்து வரைவு கடாதல்

உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த

நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந்

திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப்

பொருப்பனை முன்னின்றென்னோவினை யேன்யான் புகல்வதுவே. 137


கொளு

கயல்புரை கண்ணியை அயலுரை யுரைத்தது.  22 


23. தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல்

மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்

போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று

தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று

சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே. 138


கொளு

ஏனல் விளையாட்டினியில் லையென 

மானற் றோழி மடந்தைக் குரைத்தது.  23 

 

24. பகல்வரல் விலக்கி வரைவுகடாதல்

வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும் வருதேன்

கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்

நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன்

தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே. 139


கொளு

அகல்வரை நாடனைப், பகல்வரலென்றது.  24 

 

25. தினையொடு வெறுத்து வரைவுகடாதல்

நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று

புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்

தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று

வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. 140


கொளு

தண்புனத்தோடு தளர்வுற்றுப்

பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.  25 


26. வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்

வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்

நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்

தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே. 141


கொளு

நீங்குகவினி நெடுந்தகையென

வேங்கைமேல் வைத்து விளம்பியது.  26 


27. இரக்கமுற்றுவரைவு கடாதல்

வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த

கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ்

செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று

தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே. 142


கொளு

செழுமலை நாடற்குக் கழுமலுற் றிரங்கியது.  27 


 28. கொய்தமை கூறி வரைவுகடாதல்

பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக்காம்

விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு மேல்வரு மூரெரித்த

நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக்

கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனமே. 143


கொளு


நீடிரும்புனத்தினி யாடேமென்று

வரைவுதோன்ற வுரை செய்தது.  28 


29. பிரிவருமைகூறி வரைவுகடாதல்

பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்

அருவிசெய் தாழ்புனத் தைவனங் கொய்யவு மிவ்வனத்தே

பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடு மென்னும்பெற்றி

இருவிசெய் தாளி னிருந்தின்று காட்டு மிளங்கிளியே. 144


கொளு

மறைப்புறக் கிளவியிற் சிறைப்புறத் துரைத்தது.  29 


30. மயிலொடுகூறி வரைவுகடாதல்

கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே

மணியார் பொழில்காண் மறத்திர்கண்  டீர்மன்னு மம்பலத்தோன்

அணியார் கயிலைமயில்காள் அயில்வே லொருவர்வந்தால்

துணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே. 145


கொளு

நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்

பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.  30 

 

31. வறும்புனங்கண்டு வருந்தல்

பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே

இதுவெனி லென்னின் றிருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே

எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி

மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே. 146


கொளு

மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல

மின்பொலிவேலோன் மெலிவுற்றது.  31 


32. பதிநோக்கி வருந்தல்

ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்

தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை

வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ

நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. 147


கொளு

மதிநுத லரிவை பதிபுக லரிதென

மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.  32


பகற்குறி முற்றிற்று  

  

திருச்சிற்றம்பலம்