திருக்குறள் ( அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல் ) - குளக்கட்டு விநாயகர் ஆலயம்

செருக்கன் குளக்கட்டு விநாயகர் ஆலயம் Photos Hindu story தமிழ் புராண நூல்கள் இதிகாசம் இந்து சமய கதைகள் இந்து புராணமக்கள் இதிகாசங்கள் திருமுறைகள் தேவார பதிகங்கள் பக்திப் பாடல்கள் தேவாரம் கதைகள் இந்து கதைகள்

test

Thursday, July 30, 2020

திருக்குறள் ( அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல் )

திருக்குறள்

                 அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல் 




சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு


அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு


ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற


அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்


அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை


அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்


அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி


No comments:

Post a Comment